விடியலுடன் பிறக்கட்டும் இந்த புத்தாண்டு
எந்த மொழியையும் தாக்குவதற்காக அல்ல இந்ந கட்டுரை....என் தமிழ் மொழியை தாங்குவதற்காகவே எழுதப்படுகிறது..நினைவில் கொள்ளுங்கள் இது தமிழ்ப் புத்தாண்டு…………!!!!
ஆங்கில புத்தாண்டையே
கொண்டாட பழகி விட்ட நாம்,நாம் தமிழர்
என்பதையே மறந்து விட்டோம்.ஆங்கில புத்தாண்டை புதுபுது விதமாய் கொண்டாடும் நாம்,தமிழ் வருடத்தின்
முதல் மாதத்தை கூட நினைவில் வைத்திருபதில்லை.வெரும் 26 எழுத்தக்கள்
கொண்ட ஆங்கிலம் பெரிது எனில்,247 எழுத்துக்களும்,தனிச் சொல்,பொருள் வடிவமும் கொண்ட என் தமிழ்
மிகப் பெரிது என்பதே தெளிவு.
மனிதன் தோன்றிய 20,000 வருடங்களில் தமிழ் கண்ட வளர்ச்சி
என்பது இன்றைய இளைஞர்களால் கொல்லப்படுகிறது என்பது அதிர்ச்சி. தமிழ் என்பது
இன்றைய இளளஞர்களிடம் வெரும் சொல்லாகிவிட்டது.ஆனால்,அது
கலாச்சாரத்தின் உச்ச நிலை என்பது எம் தமிழ் முன்னோர் கண்டது.தமிழ் வாழ்க என்பதும்,தமிழ் வளர்க என்பதும் பெயர்
பலகையாகவே சில இடங்களில் நிற்கிறது.இதற்கு என்ன தான் தீர்வு......??????
இதோ உண்மையில் நாம்
செய்ய வேண்டியது,
Ø பொது இடங்களில் தமிழில் பேசுவதற்கு முன்னுரிமை,
Ø ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ் சொற்களைத் தெரிந்துக் கொள்ளுதல்,
Ø தமிழில் கையேழுத்து இடுதல்,
Ø தமிழ் கல்வி கட்டாயம்,
Ø தமிழ் மறபு பேணுதல்,
Ø நமது பிறந்ந நாள் தேதிகளையும்,மாதங்களையும் தமிழில் தேரிந்தக் கொள்ளுதல்,
Ø தமிழ் தொண்மையை பறப்புதல்,
Ø தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கற்பித்தல்,
தமிழில் பேச வேண்டும் என்பதை நிறுத்திவிட்டு,இன்று முதல் பேச
தொடங்குவோம்.தமிழை இன்றே விதைப்போம்.இன்றைய விதையே,நாளைய மரம்


Faith arise here
ReplyDelete