Thursday, April 13, 2017

தமிழ்ப் புத்தாண்டு

விடியலுடன் பிறக்கட்டும் இந்த புத்தாண்டு

எந்த மொழியையும் தாக்குவதற்காக அல்ல இந்ந கட்டுரை....என் தமிழ் மொழியை தாங்குவதற்காகவே எழுதப்படுகிறது..நினைவில் கொள்ளுங்கள் இது தமிழ்ப் புத்தாண்டு…………!!!!

ஆங்கில புத்தாண்டையே கொண்டாட பழகி விட்ட நாம்,நாம் தமிழர் என்பதையே மறந்து விட்டோம்.ஆங்கில புத்தாண்டை புதுபுது விதமாய் கொண்டாடும் நாம்,தமிழ் வருடத்தின் முதல் மாதத்தை கூட நினைவில் வைத்திருபதில்லை.வெரும் 26 எழுத்தக்கள் கொண்ட ஆங்கிலம் பெரிது எனில்,247 எழுத்துக்களும்,தனிச் சொல்,பொருள் வடிவமும் கொண்ட என் தமிழ் மிகப் பெரிது என்பதே தெளிவு.
                                                                                               



மனிதன் தோன்றிய 20,000 வருடங்களில் தமிழ் கண்ட வளர்ச்சி என்பது இன்றைய இளைஞர்களால் கொல்லப்படுகிறது என்பது அதிர்ச்சி. தமிழ் என்பது இன்றைய இளளஞர்களிடம் வெரும் சொல்லாகிவிட்டது.ஆனால்,அது கலாச்சாரத்தின் உச்ச நிலை என்பது எம் தமிழ் முன்னோர் கண்டது.தமிழ் வாழ்க என்பதும்,தமிழ் வளர்க என்பதும் பெயர் பலகையாகவே சில இடங்களில் நிற்கிறது.இதற்கு என்ன தான் தீர்வு......??????
இதோ உண்மையில் நாம் செய்ய வேண்டியது,
Ø  பொது இடங்களில் தமிழில் பேசுவதற்கு முன்னுரிமை,
Ø  ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ் சொற்களைத் தெரிந்துக் கொள்ளுதல்,
Ø  தமிழில் கையேழுத்து இடுதல்,
Ø  தமிழ் கல்வி கட்டாயம்,
Ø  தமிழ் மறபு பேணுதல்,
Ø  நமது பிறந்ந நாள் தேதிகளையும்,மாதங்களையும் தமிழில் தேரிந்தக் கொள்ளுதல்,
Ø  தமிழ் தொண்மையை பறப்புதல்,
Ø  தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கற்பித்தல்,


தமிழில் பேச வேண்டும் என்பதை நிறுத்திவிட்டு,இன்று முதல் பேச தொடங்குவோம்.தமிழை இன்றே விதைப்போம்.இன்றைய விதையே,நாளைய மரம்



Saturday, April 8, 2017

"INDIA" HAS DEVELOPED OR DEVELOPING OR NOT DEVELOPED 



HERE IS A VIEW,
INDIA, World’s largest DEMOCRATIC NATION HAS CELEBRATED ITS
71ST INDEPENDENCY.
   In August 1947, INDIAN flag has been raised and it is spreading its glory and colors from Kashmir to Kanyakumari. Our honorable Prime Minister NARENDRA MODI, has promised to power all 18,000 villages with electricity. Is this can be evidence that India is developed.
   INDIA’S backbone, Agriculture is being corroded by all Indian people. Is this an example that India is not developed?
  A Statistical Strategy says that corruption makes India the Poorest. Is the example that INDIA is developing?

  All questions can be answered or will be answered only by the young leaves of India. Leaves are none but the vital resources of Indian nation addressing INDIAN YOUTHS

  Yes, it is Indian youths. An Indian citizen can be a medicine for wounded society .But, Looking towards Indian youths it is evident that Indian youths slight distracted towards destination and less interested towards society.
                                  The distracted mind set of Indian youths should be vitalized using water of society awareness.
                                An educated Indian should work for the country as his country gave him opportunity of education. Every Indian has the duty of serving his country. At the point that if all Indian youths are aware and militant towards Indian nation sure that there will be no terrorism and no corps, no laws and no courts.
                IF ALL THE INDIAN YOUTHS TURN INTO A RESPONSIBLE, PROMISE THAT THE MISSION OF ALL GREAT INDIAN LEADERS WILL BE ACCOMPLISHED. 

                                                                   -AN ESSAY FOR INDIA.






Friday, April 7, 2017

MY FIRST STORY ON MY WALL









Image result for TAMIL LANGUAGE IMAGES

ஒரு தமிழ் பறவை
வாழ்வியல்,………..
                                    அறிவியலுடன் கைக்கோர்த்துக் கொண்ட அன்றாட வாழ்வியல் தனிமனிதத்தையும்,அது பேசும் மொழியையும் மறந்துப் போக செய்து விட்டது! மொழி என்பது உணர்வுகளை மாற்றிக் கொள்ளும் கோல் எனும் கூற்று நமது வாழ்வில் பதியவைக்கப்பட்டுவிட்டது.ஆனால் மொழி என்பது ஆன்மாக்களை இணைக்கும் கயிறு என்பதே மறைக்கப்படாத உண்மை!!
உயிர் ஓட்டம் கொண்ட என் தமிழ் மொழி இதோ இங்கே இக்கட்டுரையில்,

உரிமைக்குச் சாவி இல்லையெனில்,
உடைக்கப்படும் அரசியல் கதவுகள் இனி,
மொழி என்ற சொல் புதைப்படும் எனில்,
புரட்சி எனும் சொல் விதைப்படும் இனி!!


தமிழ் மொழியும் தொண்மை,
                       “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,
                           பிறந்ந பின்னர்,யாதும் ஊரே,யாவரும் கேளீர்
என்பதோ எம் தமிழ் பறைசாற்றும் வழி. கல் தோன்றா மண் தோன்றா காலம் தொட்டு தோன்றிய என் திராவிட தமிழ் உலகில் எழுத்து வடிவம்,மொழி வடிவம் கொண்ட 6 மொழிகளில் ஒன்று என்பது பெருமை.
       
இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் உலகின் தொண்மை கொண்ட நாகரீகங்களான நைல், எகிப்திய, சிந்து நாகரீகங்களுக்கு முதன்மை என்பது ஆராய்ச்சி. உலகில் பேசப்படும் முதல் திராவிட மொழி தமிழ் என்பது அலெக்ஸ் கோலியர் என்ற ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி முடிவு.  அண்டத்தின் பொது மொழிகள் என்பது  தமிழ், கிரேக்கம்,  இப்ரூ,  லத்தீன், சமஸ்கிருதம், சீனம்.

          இவையில் அழிந்த மொழிகளாக வகைப்படுவது கிரேக்கம்,    இப்ரூ, லத்தீன் ஆகியவை. தமிழ் என்ற   மொழி அரசிஅழிந்து கொண்டிருக்கும் மொழியென பட்டியலிடப்பட்டுள்ளது.

             மொழி தந்து பேச வழி தந்த தமிழ் மொழியை இழப்பதும், அழிப்பதும் இனி நம் கையில்.வளர்ப்பதும்,பேசுவதும் மட்டும் தமிழை நிலைப்படுத்தாது, பின் வரும் தலைமுறையினருக்கு எடுத்துரைத்தல் என்பதே இன்றைய சமூகம் சார்ந்த நோக்கம் என்பது மனிதவியல்.. அதற்கு காட்டப்படும் வழி மொழி பரவல்(LANGUAGE LOCALISATION) என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

மனிதமும்,தமிழ் மொழியியலும்,பண்பாட்டுப் பகுத்தறிவும்,
            தமிழ் மொழியின் நிலைத்தன்மையை துடிப்புமிக்கதாக வைத்துக்கொள்வது தமிழ் சமூதாயத்தின் ஒரு முதற்கடமை. பேசுவதற்கும், எழுதுவதற்கும் அப்பாற்பட்டு தமிழ் வளர்ச்சிக்கு வகைமை செய்வது நன்று. அதற்கு மொழி பரவல் என்பதோ ஒரு எட்டும் கனி. நாம் அன்றாடம் பயன்படுத்தம் செயலிகள், வளைத்தளங்கள், சமூக வளைத்தளங்கள், மென்பொருள் இவற்றில் தமிழ் மொழி பரவல் செய்தல் சிறப்பு.

காரணம்,
       1.அழிந்து விட்ட நமது சில தமிழ் சொற்கள் மீண்டும் உயிர் பெரும்.
       2.அழிந்துக் கொண்டிருக்கும் தமிழ்சொற்கள் மீண்டும் ஊட்டம்
            பெரும்.  

தமிழ் மொழியில் பரவல் தேவை என்பதற்கான விடைத் தொகுப்பு,
·         முதலில்,தமிழ் என்பது நம் தாய்மொழி,பிற மொழிகளுக்காக தாய் மொழியை இழப்பது என்பது மடமை.
·         இரண்டாவதாக,அன்றாட மென்பொருள்கள் தமிழ் பரவல் செய்யப்பட்டால் பாமர  மக்களுக்கு நல்ல புரிதலை வழங்கும்.
·         அடுத்ததாக,இழக்கப் போகிற,இழந்துக் கொண்டிருக்கும் தமிழ் மறபு சொற்களின் தன்மைக் காக்கப்படும்.
·         தமிழில் உரையாடுவதற்கு முன்னுரிமை.
·         மென் பொருள் உலகில் தமிழ் பங்கு. அண்மைப் புள்ளி விவர அறிக்கை இதை உறுதி செய்து தெளிவு செய்துள்ளது,
ü  88.6% மக்கள் தங்கள் தாய் மொழியில் பரவல் தேவை என்றும்,
ü  11% மக்கள் தங்கள் தாய் மொழியில் பரவல் தேவையில்லை என்றும்,
ü  0.4% மக்கள் தெரியவில்லை என்றும் பதில் கொண்டிருக்கிறார்கள்.
·         தமிழ் மொழியின் தன்மை காத்தல்.
·         உலக அரங்கில் தமிழின் உயரிய நிலை.

உடைத்து எரியப்படும் கேள்விகள்,
1.      கேள்வி:அன்றாட வாழ்வில் ஆங்கிலம் போன்ற மொழிகளே அவசியம் தமிழ் அறிந்து கொள்ள தேவையில்லை.

பதில்:அன்றாட வாழ்விற்கு அப்பாற்பட்டு தாய் மொழி என்னும் கருத்து முதன்மை.தாய் மொழி தேவையில்லை என்பது மடமை.அந்த புரிதலே பகுத்தறிவு.

2.      கேள்வி:தமிழ் பேசத் தெரிந்திருந்தால் சில வேலைகளில் தான் அது பயன் அழிக்கும்.ஆனால் அவசியம்  என்பது தேவையில்லை.

பதில்:உலகில் அதிகம் பேசப்படும் மொழி சீனம்.சீன நாட்டில் ஆங்கிலம் என்பது சீனத்திற்கு பின் என்பதே அவர்கள் வெற்றியின் ஊட்டம்.சீனம் மட்டும் அல்லாது பல நாடுகளிள் கடைப்பிடிக்கப்படும் வழி இதுவே.
தாய் மொழிக்குப் பின்னே பிற மொழிகள்.
             2014 -ல் தமிழ் பேச தெரிந்த மக்களின் சதவீதம் 53.7 %.  தமிழ் மொழி அழிந்து போகிறதா,இல்லை நாம் தான் தாய் மொழியை விட்டு அழிந்து போகிறோமா என்ற கேள்வியின் பதில் நாம் பார்க்கும் மனநிலை சார்ந்ததே.அடையாளம் இழக்க தயார் இல்லை எனில் மொழி பரவல் அவசியம்,தாய் மொழி பற்றிய அடிப்படை அறிவு தேவை என்பதே நிதர்சனமான உண்மை.
            தமிழீகத்தில் தமிழனாய் பிறந்து தமிழனாய் வளர்ந்து,தமிழ் மொழியை பயின்று,தாய் மொழிக்காய் வாழ்வதே முழுமையான வாழ்வு.அதற்கு அனைவரும் தமிழில் பிரிதிநிதித்துவம் பெறுதல் அவசியம்
உலகம் முழுவதையும் ஆரத் தழுவி அரவணைத்த செம்மொழி எமது தமிழ்.படை பல கண்டு தடை பல கடந்து கொடியதை நாட்டியப் பெருமை!முதல் மனிதன் அசைத்த நாவில் இசையாய் பிறந்த மொழி.அது பிறப்பு,இறப்பு இரண்டும் அற்ற இறை மொழி என முற்றுப் பெறுகிறேன்.


-பாலாஜி வெங்கட்ராமன்.